சில்ஸ் ஸ்மிதாவாக மாறிய காஜல்! ரசிகர்களை மிரளவைக்கும் சாண்டி மாஸ்டரின் முன்னாள் மனைவி
Bigg Boss
By Jai
தமிழ் சினிமாவில் இருசில படங்கள் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை காஜல் பசுபதி. வசூல் ராஜா என்பிபிஎஸ், டிஸ்யூம், ச்ஙம் கோ, ஆயிரத்தில் ஒருவன், கலகலப்பு 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
நடன இயக்குனர் சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்ட காஜல் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு பிரிந்துவிட்டார். அதன்பின் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களிடம் பேசி வந்தார்.
இடையில், பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டு சில நாட்களிலேயே வெளியேற்றப்பட்டார். தற்போது போட்டோஷூட் பக்கம் சென்றுள்ள காஜல் சில்ஸ் ஸ்மிதா மாதிரி உடையணிந்து அவரை போல் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.