நடிப்பு அரக்கனான துல்கர் சல்மான்!! காந்தா படம் விமர்சனம்..
காந்தா படம்
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரக்கனி, காயத்ரி, நிழல்கள் ரவி, வையாபுரி உள்ளிட்ட பல நடிப்பில் இன்று நவம்பர் 14 ஆம் தேதி ரிலீஸ்யாக படம் தான் காந்தா.

எம் கே தியாகராஜ பாகவதரின் பயோபிக் படமாக இப்படம் இருக்கும் என்று தகவல் வெளியானது. பல பழம்பெரும் நடிகர்களை தன் நடிப்பால் கண்முன்னே நினைவுக்கு கொண்டி வந்திருக்கிறார் துல்கர் சல்மான். அவரின் கைப்படைப்பு கை கொடுத்ததா? அல்லது கவிழ்ந்துவிட்டதா? என்ற விமர்சனத்தை பார்ப்போம்...'
கதைக்களம்
நஷ்டத்தில் இருக்கும் மாடர்ன் திரையரங்கு தயாரிப்பு நிறுவனத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் நடிப்பு சக்ரவர்த்தியாக வலம் வரும் டி கே மகாதேனை(துல்கர்) வைத்து படம் பண்ணியாக வேண்டும் என்ற நெருக்கடியில் அய்யா(சமுத்திரக்கனி) தள்ளப்படுகிறார்.
அநாதையாக இருந்த டிராமா ஆர்ட்டிஸ்ட்டை சினிமாவில் ஹீரோவாக மாற்றிய அய்யாவைவிட்டு ஒரு கட்டத்தில் விலகும் மகாதேவன், சிறைக்கு செல்ல காரணமே அவர் தான் என்ற கோபத்தில் இருக்கிறார்.

மீண்டும் இருவரும் இணைந்து சாந்தா என்ற படத்தை பண்ண ஆரம்பிக்க, தன் ஒட்டுமொத்த ஈகோவையும் ஸ்டார்டம்மை பயன்படுத்தி காட்டும் ஹீரோ படத்தின் தலைப்பை காந்தா என்று மாற்றுவது மட்டுமில்லாமல் கிளைமேக்ஸ் வரை மாற்றுகிறார்.
முதல் பாதி முழுவதுமே ஹீரோ மற்றும் இயக்குநரின் ஈகோ மோதல்கள், ஹீரோயினாக முதல் படத்தில்நடித்து வரும் குமாரி(பாக்யஸ்ரீ) உடனான ரகசிய உறவு வைத்துக்கொண்டிருக்க, இடைவேளையில் ஒரு கொலை சம்பவம் நடக்கிறது.

ஸ்டூடியோவில் நடந்த அந்த கொலையை ஹீரோ செய்தாரா? இயக்குநர் செய்தாரா? அல்லது யார் செய்தார் என்ற விசாரணையின் முடிவில் தான் இந்த படத்தின் கதை.
துல்கர் சல்மான் நடிப்பு
மொத்த படத்திலும் துல்கர் சல்மானின் நடிப்பு, முதல் ஷாட்டில் இருந்து கடைசி ஷாட் வரை தனித்துவமாக தெரிந்தது. அப்படியே துல்கர் நடிப்பு சக்கரவர்த்தியாகவே மாறிவிட்டார். அவருக்கு போட்டியாக சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ போர்ஸ் உள்ளிட்டவர்கள் நடிக்க முடின்றாலும் துல்கர் சல்மான் பக்கத்தில் கூட இருவராலும் வரமுடியவில்லை. கண்ணாடி சீன், கன்னத்தில் அடிவாங்கும் சீன், கடைசி கிளைமேக்ஸ் சீன் என்று துல்கர் நடிப்பால் மிரட்டுகிறார்.

முதல் பாதி படமே துல்கர் சல்மான் ரசிகர்கள் மட்டும் கலைப்படைப்பை எதிர்ப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு போதுமானதாக உள்ளது. இரண்டாம் பாதியில் ராணா டகுபதியின் அடாவடி போலிஸ் எண்ட்ரி, படத்தை வேறொரு டிராக்கிற்கு கொண்டு சென்று எந்தளவிற்கு சொதப்புமோ அந்தளவிற்கு சொதப்பிவிடுகிறது. துல்கர், பாக்ஸ்ரீ, சமுத்திரக்கனி உயிரை கொடுத்து நடித்தது எல்லாம் ரசிகர்களை சரியாக சென்று சேராமல் போவதுதான் படத்தின் பெரிய பிரச்சனை. ஒருவழியாக கிளைமேக்ஸில் நானே மீட்டெடுக்கிறேன் என்று துல்கர் சல்மான் அனைவரையும் கைத்தட்ட வைத்திருக்கிறார்.
முதல் பாதி - 2 ஆம் பாதி
ஒருவழியாக முதல் பாதி பட்டாசாக செல்ல, இரண்டாம் பாதி சற்று சோதிக்கத்தான் செய்திருக்கிறது. எப்படி இருந்தாலும் இப்படத்திற்காக துல்கர் சல்மானுக்கு பல விருதுகள் குவியும் என்றே சொல்லலாம்.