ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போன தனுஷ் பட நடிகர்!! தற்போதைய நிலை..

Dhanush Sudeep Actors
By Edward Jun 07, 2023 11:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் தனுஷின் சினிமா கேரியரை மாற்றியமைத்த படம் காதல் கொண்டேன். அவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்தது.

இப்படத்தில் கதாநாயகியாக நடிகை சோனியா அகர்வாலும் ஆதி கதாபாத்திரத்தில் சுதீப் சாரங்கியும் நடித்துள்ளனர். இப்படத்தில் மிகமுக்கிய ரோலில் நடித்த சுதீப் இப்படத்திற்கு பின் ஒருசில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போன தனுஷ் பட நடிகர்!! தற்போதைய நிலை.. | Kadhal Konden Adhi Role Actor Sudeep Latest Photo

தற்போது, சுதீப் கார் டிரைவராக காக்கி ஆடையணிந்து எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து அவர் சினிமாவில் ஒதுங்கி டிரைவர் வேலையை பார்க்கிறார் என்ற தகவல் இணையத்தில் செய்தியாக வெளியாகியது.

ஆனால் சுதீப் சாரங்கி, விளம்பர படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். கார் டிரைவர் கதாபாத்திரத்தில் எடுத்த புகைப்படம் தான் அது என்று தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரது சோசியல் மீடியா பக்கத்திலும் சுதீப் அப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.