கண்ணப்பா படத்தில் சிவன் - பார்வதியாக நடிக்க காஜல் அகர்வால், அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Kajal Aggarwal Akshay Kumar Kannappa
By Kathick Jul 01, 2025 12:30 PM GMT
Report

பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம்தான் கண்ணப்பா. சிவ பெருமானுக்கு கண்களை கொடுத்த கண்ணப்ப நாயனாரின் கதைதான் இந்த கண்ணப்பா.

கண்ணப்பா படத்தில் சிவன் - பார்வதியாக நடிக்க காஜல் அகர்வால், அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Kajal Aggarwal Akshay Kumar Kannappa Movie Salary

இப்படத்தில் பார்வதி கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடித்திருந்தார். இப்படத்தில் கேமியோ ரோலாக இருந்தாலும் தனது நடிப்பில் எந்த ஒரு குறையும் அவர் வைக்கவில்லை.

கண்ணப்பா படத்தில் சிவன் - பார்வதியாக நடிக்க காஜல் அகர்வால், அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Kajal Aggarwal Akshay Kumar Kannappa Movie Salary

அதே போல்தான் இப்படத்தில் சிவன் கதாபாத்திரத்தை சிறப்பாக ஏற்று நடித்திருந்தார் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை உலகளவில் ரூ. 38 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

கண்ணப்பா படத்தில் சிவன் - பார்வதியாக நடிக்க காஜல் அகர்வால், அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Kajal Aggarwal Akshay Kumar Kannappa Movie Salary

இந்த நிலையில், கண்ணப்பா திரைப்படத்தில் பார்வதியாக நடிக்க காஜல் அகர்வால் மற்றும் சிவனாக நடிக்க அக்ஷய் குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை காஜல் அகர்வால் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் சிவனாக நடித்திருந்த அக்ஷய் குமார் ரூ. 6 கோடி சம்பளம் வாங்கியுள்ளாராம்.