நடிகை காஜல் அகர்வாலுக்கு பையன் பொறந்துட்டான்.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துக்கள்

boy baby kajal aggarwal
By Kathick Apr 19, 2022 01:15 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவருக்கும், கௌதம் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின்பும் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வந்த காஜல், தீடீரென தனது கணவருக்காக சினிமாவில் இருந்து விலகிவிட்டார். மேலும், தான் கர்ப்பமாக இருப்பதாகவும் சந்தோஷமான செய்தியை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கர்ப்பமாக இருந்த நடிகை காஜல் அகர்வாலுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சந்தோஷ செய்தியை கேள்விப்பட்ட திரையுலக பிரபலங்கள் பலரும், தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகிறார்கள்.