அப்பா முன்பு அதை செய்ய சொன்ன இயக்குனர், அழுத காஜல் அகர்வால்!! அவரே கொடுத்த பேட்டி

Kajal Aggarwal Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan May 11, 2024 02:30 PM GMT
Report

நடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

இவர் 2007-ஆம் ஆண்டு தெலுங்கில் லட்சுமி கல்யாணம் என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின் தமிழில் "பழனி" படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

அப்பா முன்பு அதை செய்ய சொன்ன இயக்குனர், அழுத காஜல் அகர்வால்!! அவரே கொடுத்த பேட்டி | Kajal Aggarwal Cried Infornt Of Director

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட காஜல் அகர்வால், தனக்கு முதல் எப்படி பட வாய்ப்பு கிடைத்தது என்பதை பற்றி பேசியுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், முதன் முதலில் தெலுங்கில் இயக்குனர் தேஜா இயக்கிய லட்சுமி கல்யாணம் படத்தில் நடிக்க அழைத்தார். அப்போது எனக்கு தெலுங்கு தெரியாது அதனால் எந்த மாதிரி நடிக்க சொல்லுவார்கள் என்று கேள்வி எனக்குள்ளே இருந்தது. அதனால் பதற்றத்தோடு உட்கார்ந்து இருந்தேன் ஆடிஷன் சென்று போது என்னுடைய அப்பாவும் வந்து இருக்கிறார். என்னை அழுது காட்டுங்கள் என்று சொன்னார்.

எப்படி அழுவது என்று யோசித்து கொண்டிந்தேன். எப்போதும் நான் அழும் ஒரு விஷயத்தை சொன்னார். அவ்வளவுதான்.உடனே அழ தொடங்கிவிட்டேன். நீ ரொம்ப அழகாக அழுதாய் என்று இயக்குனர் சொல்லி முதல் பட வாய்ப்பை எனக்கு கொடுத்தார் என்று காஜல் அகர்வால் கூறியுள்ளார்.