நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறாரா? இந்த நடிகர் படத்தில் இருந்து விலக இதுதான் காரணமா!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக குறுகிய காலக்கட்டத்தில் எட்டியவர் நடிகை காஜல் அகர்வால். சமீபத்தில் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எல்லா நடிகைகளும் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தொடர யோசிப்பதை போன்று காஜல் அகர்வாலும் விலகுவார் என்று செய்திகள் பரவின.
அதற்கு ஏற்ப சமீபத்தில் காஜல் அவர் ஓகே சொன்னால் சினிமாவில் இருந்து விலக தாயாராக இருக்கிறேன் என்று கூறியிருந்தார். அந்தவகையில் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா படமான தி கோஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் கமிட்டாகி இருந்தார்.
இந்நிலையில் அப்படத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு பதிலாக திரிஷா அல்லது நடிகை இலியானாவிடம் கால்ஷீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அதற்கு காரணம் நடிகை காஜல் கெளதம் கிச்சுலு கோடி கூடியசீக்கிரம் குழந்தை பெறப்போவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் காஜல் கர்ப்பமாக இருக்கிறாரோ என்று கேள்விகள் தற்போது எழுந்து வருகிறது.
ஏற்கனவே நடிகர் சிரஞ்சீவி மற்றும் ராம் சரண் இணைந்து நடிக்கும் ஆச்சார்யா படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படியொரு செய்தி ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.