அங்குதான் பெண்களுக்கு மரியாதை..எனக்கு கிடைக்காதது.. நடிகை காஜல் ஓபன் டாக்!!

Kajal Aggarwal Bollywood Tamil Actress Kollywood
By Jai Jun 07, 2026 06:45 AM GMT
Report

காஜல் அகர்வால்

இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் திருமணத்திற்கு பிறகு ஓரிரு கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் NBK 111 திரைப்படம் உருவாகி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

அங்குதான் பெண்களுக்கு மரியாதை..எனக்கு கிடைக்காதது.. நடிகை காஜல் ஓபன் டாக்!! | Kajal Aggarwal Open Talk About South Cinema

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நட்சத்திரங்களில் காஜல் அகர்வாலும் ஒருவர். தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள், போட்டோஷூட், புரொமோஷன் ஆகியவற்றை அவர் அதில் பதிவு செய்வார். சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியொன்றில் சினிமாத்துறை பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அங்குதான் பெண்களுக்கு மரியாதை..எனக்கு கிடைக்காதது.. நடிகை காஜல் ஓபன் டாக்!! | Kajal Aggarwal Open Talk About South Cinema

தென்னிந்திய திரைத்துறை

எனக்கு தென்னிந்திய திரைத்துறை மீது கூடுதல் ஈர்ப்பு உண்டு. ஏனென்றால் அங்குதான் நான் என்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினேன். அங்கு 9 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்வதில்லை.

பாலிவுட்டில் எனக்கு கிடைக்காத ஒருவித சவுகரியம் தென்னிந்திய சினிமாவில் கிடைக்கிறது. ஒழுக்கம் மற்றும் நேரத்தை சரியாக கடைபிடித்தல் ஆகியவற்றுடன் பெண்களுக்கு மிகுந்த மரியாதையும் அளிக்கப்படுகிறது என்று காஜல் தெரிவித்திருக்கிறார்.