படப்பிடிப்பு தளத்தில் கழிவறை இல்லை!! வழியில்லாமல் கல்லறையில்!! நடிகை காஜல் அகர்வால்..
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர் கடந்த 2020ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பின் அதிக படங்கள் நடிக்காத காஜல் அகர்வால் போட்டோ ஷுட்கள், சொந்த தொழில் கவனிப்பது என பிஸியாக உள்ளார். சமீபத்தில் காஜல் ஒரு பேட்டியில் கூறிய விஷயம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதில், உலகின் 7 அதிசயங்களில் ஒன்றான ஜோர்டானின் பெட்ராவில் ஒரு பாடல் காட்சிக்காக படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கழிவறை மிகவும் தூரத்தில் இருந்ததால் அவசர நிலை ஏற்பட்டது. அதனால் நான் அங்கேயே சிறுநீர் கழித்துவிட்டேன்.
பின் ஒரு கல்லறையில் தான் நான் அதை செய்தேன் என்று தெரியவந்தது. அதற்காக நான் மிகவும் வருந்தினேன் என்று காஜல் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.