சரக்கு பாட்டில், கணவருடன் நெருக்கம்.. நிஜமாவே காஜல் கர்ப்பமா தான் இருக்காங்களா!
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்வரும் நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தான், நடிகை காஜல் அகர்வாலுக்கு கவுதம் என்பவருடன் காதல் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று முடிந்தது.
அவ்வப்போது தனது கணவருடன் இணைந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதன்படி தற்போது, ஒரு பக்கம் சரக்கு பாட்டில் மற்றொரு புறம் கணவருடன் நெருக்கமாக அமர்ந்தபடி, போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடிகை காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகியிருந்தது. இதற்காக தான் கமிட்டான படங்களில் இருந்தும் அவர் வெளியேறினார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நிஜமாவே காஜல் அகர்வால் கர்ப்பமாக தான் இருக்கிறாரா..? என்று கேள்வி கேட்க துவங்கிவிட்டனர்.
