எல்லாம் முடிந்துவிட்டது.. நடிகை காஜல் அகர்வால் பரபரப்பு பேச்சு
காஜல் அகர்வால்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். தெலுங்கில் வெளிவந்த லட்சுமி கல்யாணம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதை தொடர்ந்து, மகேஷ் பாபு, விஜய், அஜித், தனுஷ், சூர்யா என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு கவுதம் கிச்சுலு என்பவரை காஜல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு Neil என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். தற்போது, தனது உடல் எடையை குறைத்து முன்பு போன்று நடிக்க தொடங்கி விட்டார்.
காஜல் கடுப்பு
இந்நிலையில், நடிகை காஜல் அகர்வாலிடம் 40 வயதை கடந்த நிலையில் மீண்டும் சினிமாவில் சாதிக்க வந்துள்ளதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளனர்.
அதை கேட்டு கடுப்பான காஜல், "40 வயதானால் எல்லாம் முடிந்துவிட்டது என்று அர்த்தமில்லை. திறமைக்கு வயது தடையாக இருக்காது. இனி அப்படி கேட்காதீர்கள்" என்று சொல்லிவிட்டாராம்.