2 பேருடன் லிப் லாக் காட்சிக்கு பல முறை ஒத்திகை!.. சர்ச்சையில் சிக்கிய 48 வயதான கஜோல்
பிரபு தேவா, அரவிந்த் சாமி நடிப்பில் 1997 -ம் ஆண்டு வெளியான மின்சார கனவு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் கஜோல்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர், தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார்.
சமீபத்தில் கஜோல் நடித்துள்ள The Trial என்ற வெப் தொடர் OTT தலத்தில் வெளியானது. அந்த தொடரில் கஜோல் இரண்டு நபர்களுடன் லிப் லாக் அடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருக்கிறது.
இந்நிலையில் லிப் லாக் காட்சியில் நடித்ததை குறித்து பேசிய சக நடிகர் ஆலி, ஒரு ஆடம்பரமான ஹோட்டலில் இந்த காட்சியை ஷூட்டிங் எடுக்கப்பட்டது.
லிப் லாக் காட்சியில் நடிக்கும் கஜோலுக்கு எந்தவிதமான வெட்கமோ, கூச்சமோ, தயக்கமோ இல்லை. அந்த காட்சியை எடுக்கும் போது 2 முறை ஒத்திகை பார்த்தோம் என்று கூறியுள்ளார்.