மங்காத்தா படம் இதுவரை முன்பதிவில் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?
Ajith Kumar
Box office
By Karthick Raja
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி 2011ஆம் ஆண்டு வெளிவந்த படம் மங்காத்தா.
இப்படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா, அஞ்சலி, வைபவ், பிரேம்ஜி என பலரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

பிளாக்பஸ்டர் வெற்றியடைந்த இப்படத்தை தற்போது 15 ஆண்டுகள் கழித்து ரீ ரிலீஸ் செய்கின்றனர்.
வருகிற 23ஆம் தேதி மங்காத்தா படம் ரீ ரிலீஸ் ஆவதை தொடர்ந்து முன்பதிவு பட்டையை கிளப்பி வருகிறது. இதுவரை ரூ. 1.5 கோடி முன்பதிவில் வசூல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.