வலுகட்டாயமாக இழுத்து வந்தோம்! பிருந்தா பற்றி உண்மையை கூறிய கலா மாஸ்டர்

master kala brinta choreographer
By Edward Jul 02, 2021 04:50 AM GMT
Report

சினிமாவை பொருத்தவரை படங்களின் நடன இயக்குநர்கள் ஆண்களாகவே இருந்து வந்தானர். ஆனால் இதை உடைக்கும் வண்ணம் உருவானவர்கள் தான் கலா மாஸ்டர் மற்றும் பிருந்தா மாஸ்டர்.

ஆரம்ப காலத்தில் தங்களை யாரும் மதிக்க மாட்டார்கள் என்றும் எந்த தயாரிப்பாளர் கடைசி வரிசையில் நிற்க சொன்னரோ அவரே முதலில் நிற்க வைக்கும் அளவிற்கு திறமையை காட்டி இந்த இடத்திற்கு வந்தோம் என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.

நடன இயக்குநரான பிருந்தாவை நாங்கள் இந்ததுறைக்கும் வலுக்கட்டாயமாக தான் அழைத்து வந்தோம். நன்றாக படிக்கும் விருப்பம் இருந்தது அவருக்கு. ஆனால் சூழ்நிலை மாற்றியது என்று கூறியுள்ளார்.

எங்கள் இருவருக்கும் ஒரு முக்கிய எண்ணம் இருந்தது, என்னவெனில் டான்ஸ் மாஸ்டர்களில் எவ்வளவு போட்டி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட கூடாது, நீ உன்னை ஜெயிக்க வேண்டும், நீ உன்னை ஜெயித்தால் போதும், சக போட்டியாளர்களை பற்றி கவலைப்படத் தேவையில்லை என்பது தான்.

அப்படிதான் நாங்கள் இருவரும் இருந்தோம் என்று பிருந்தாவும் கலாவும் கூறியுள்ளனர்.