நீயெல்லாம் எப்படி ஆடுவ! ஜோதிகாவை அசிங்கப்படுத்தினார்கள்! உண்மையை உடைத்த கலா மாஸ்டர்..

jyothika rajinikanth pvasu kalamaster chankdramukhi
By Edward Mar 13, 2022 02:45 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வாளி படத்தில் சிறு கதாபாத்திரத்டதில் நடித்து மாடல் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஜோதிகா. முதல் படத்திலேயே நடிகர் சூர்யாவின் பூவெல்லேம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய், அஜித், அர்ஜுன், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்தார்.

சூர்யாவுடன் நடித்து அந்த கெமிஸ்டிரி ரியல் வாழ்கைக்கும் செட்டாகியதால் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 2006 ஆம் ஆண்டிருக்கு பிறகு கமிட்டகிய படங்களில் நடித்து முடித்து குழந்தைகளுக்காக சினிமாவிட்டு விலகிவிட்டார். அதன்பின் 2015ல் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், ஜோதிகாவின் நடனம் குறித்து கலா மாஸ்டர் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியிருந்தார். நான் கஷ்டபட்டு நடனமாட வைத்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஜோதிகா. சந்திரமுகி படத்தின் போது பரதநாட்டியம் இவரா ஆடுவார் என்று பலர் என்னிடம் கிண்டல் செய்து ஜோதிகாவை அசிங்கப்படுத்தினார்கள்.

அவரெல்லாம் ஆடுவாரா என்று மற்றவர்கள் என் காதுபட பேசினார்கள். இதனால் ஜோதிகா என்னால் ஆடமுடியுமா? சொதப்பாதே என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதற்கு கலா மாஸ்டர் உனக்கேற்ப நடனத்தை அமைக்கிறேன் என்று கூறினார்.

அப்படி கற்றுக்கொடுத்த பின் ஜோதிகா பின்னி பெடல் எடுத்துவிட்டார். அப்படி ஆடியதை வாசு, ரஜினி சார் எல்லாம் பெருமையாக பேசினார்கள் என்று கூறியுள்ளார்.