ஷூட்டிங்கில் கோபப்பட்டு திட்டிய நடன இயக்குனர்! படப்பிடிப்பில் இருந்து அழுதுகொண்டே ஓடிய திரிஷா..

trisha tamilactress kalamaster lesalesa
By Edward Mar 12, 2022 05:20 PM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை திரிஷா. நயன் தாரா, சமந்தா, அனுஷ்கா செட்டி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் அறிமுகமாகும் சமயத்தில் நம்பர் 1 நடிகையாக திகழ்ந்து வந்தார் திரிஷா. ஜோடி படத்தில் கதாநாயகிக்கு தோழியாக நடித்தப்பின் சூர்யாவின் மெளனம் பேசியதே படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அதன்பின் அடுத்தடுத்த தமிழ், தெலுங்கு மொழிப்படங்களின் முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு கொடிக்கட்டி பறந்தார். இடையில் திருமணம், காதல் என்று சினிமா வாழ்க்கை தடுமாறி மார்க்கெட்டினை தொலைத்தார். அதன்பின் 96 படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் நடித்து ரீஎண்ட்ரி கொடுத்தார்.

என்னதான் முன்பிருந்த மார்க்கெட் இல்லாமல் போனாலும் தன்னுடைய இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியை செய்து வருகிறார். சமீபத்தில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் பேட்டியொன்றில் திரிஷா பற்றிய சில உண்மை சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

லேசா லேசா படத்தின் போது பெரிய செட்டுடன் நடன காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, சின்ன நடன நெளிவு வரவில்லை. இதனால் கோபப்பட்ட திட்டியதால், அழுது கொண்டே மேக்கப் ரூம் போய்ட்டா. நான் லண்டன் போகிறேன் என்று சோகத்திலேயே இருந்தார்.

அங்கு அவரின் அம்மா இருந்தார். உடனே திரிஷாவிடம் சென்று சமாதானப்படுத்தினேன். அதன்பின் சிறப்பாக நடித்து கொடுத்தார் திரிஷா என்று கலா மாஸ்டர் கூறியுள்ளார்.