நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் சினிமாவிற்கு வருவதற்கு முன் எப்படி இருக்கிறார் பாருங்க.. ஷாக்கிங் புகைப்படம்
இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிஸியின் மகள் கல்யாணி ப்ரியதர்ஷன் தெலுங்கில் வெளிவந்த ஹெலோ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் மலையாளம், தமிழ் என தென்னிந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை உருவாக்கியுள்ளார்.
இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தற்போது ரவி மோகனுடன் இணைந்து ஜீனி படத்தில் நடித்து வருகிறார்.
இது மட்டுமின்றி மலையாளத்தில் உருவாகி வரும் பெண் சூப்பர் ஹீரோ Lohak எனும் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வரும் கல்யாணி ப்ரியதர்ஷன் சினிமாவில் நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் என்பது குறித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நம்ம கல்யாணியா இது? நடிக்க வருவதற்கு முன் உடல் எடை கூடி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு உள்ளாரே என கூறி வருகிறார்கள். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

