23 வயதில் தற்கொலை செய்து கொண்டு தாய்? இத்தனை கஷ்டங்களை சந்தித்த நடிகை கல்யாணி..

Indian Actress
By Edward May 25, 2022 02:55 AM GMT
Report

சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் 2000 ஆண்களில் விஜேவா பணியாற்றி பிரபலமானவர் நடிகை கல்யாணி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி 300க்கும் மேற்பட்ட விளம்பரப்படங்களில் நடித்தும் இருக்கிறார்.

ஒருசில படங்களில் நடித்து மக்கள் மனதை ஈர்த்த கல்யாணி 2013ல் ரோஹித் என்பவரை திருமணம் செய்து இரு ஆண் குழந்தைக்கு தாயானார். அதன்பின் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்த கல்யாணி மீண்டும் விஜே பணியை தொடர்ந்துள்ளார்.

தற்போது இணையத்தில் தன்னுடைய அம்மா பற்றிய உருக்கமான பதிவினை போட்டுள்ளார். அதில், டிசம்பர் 24, 2014ம் ஆண்டு எல்லோரும் வருட முடிவில் சந்தோஷம் இருந்திருப்பீர்கள்.

ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம். தனது தாய் அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். என்ன செய்வது என்று கூட அப்போது எனக்கு புரியவில்லை. எனது தாய் இறக்கும் போது எனக்கு 23 வயது என்று கூறியுள்ளார்.