கதையை மாத்தச்சொன்ன உலக நாயகன்! கமலை தூக்கி எறிந்து வேறொரு நடிகரை போட்ட சங்கர்

shankar kamalhaasan tamilcinema arjun gendleman
By Edward Mar 17, 2022 05:20 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குனராக திகழ இயக்குனர் சங்கருக்கு அடிதளமிட்ட படம் என்றால் அது ஜெண்டில்மேன் தான். அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய வெற்றியை கண்டது. முதலில் இப்படத்தில் உலக நாயகன் தான் தேர்வு செய்து நடிக்கவிருந்ததாம்.

இயக்குனர் சங்கர் கமலிடம் கதையை கூறியபோது கதையில் சில மாற்றங்கள் வைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறி சின்ன சின்ன மாற்றங்களை கூறியுள்ளார். ஆனால் அப்படி செய்தால் கதையின் தொணி மாறிவிடும் என்று யோசித்துள்ளார் சங்கர்.

இதனை கமலிடம் விளக்கமளித்து கூறியதும் புரிந்து கொண்ட கமல் வேறொரு நடிகரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியதோடு, இப்படி கூறியதால் என்னை தவறாக நினைக்க வேண்டாம்.

அதுமட்டுமில்லாமல் இருவருக்கும் இதனால் மன சங்கடம் ஏற்படும் என்பதால் தான் வேறொருவரை வைத்து நடிக்க கூறினேன் என்றும் கமல் அறிவுரையாக கூறியிருக்கிறார்.

இதைதொடர்ந்து தான் கமலை நீக்கி நடிகர் அர்ஜுனை நடிக்க வைத்துள்ளார். படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமைந்தது. இதன்பின் தான் கமலுக்காகவே இந்தியன் படத்தினை எழுதி படமாக்கினார்.