ஏ.ஆர்.ரஹ்மான் கையை தட்டிவிட்ட கமல்.. மேடையில் நடந்த குழப்பம், என்ன ஆனது?

Kamal Haasan A R Rahman Thug Life
By Bhavya May 27, 2025 07:30 AM GMT
Report

தக் லைப்

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஸ், அசோக் செல்வன் என முன்னணி பிரபலங்கள் நடிக்க வரும் ஜுன் 5ம் தேதி வெளியாகப்போகும் திரைப்படம் தக் லைப்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 4 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளதால் எல்லா மொழிகளிலும் படத்திற்கான புரொமோஷன் வேகமாக நடந்து வருகிறது.

படு மாஸா இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இந்த விழாவில் கமல், ஏ.ஆர்.ரகுமான், த்ரிஷா என பலர் கலந்துகொண்டு படத்தை புரொமோட் செய்தார்கள். அப்போது பல விஷயங்களையும் கமல், த்ரிஷா என அனைவரும் பகிர்ந்து கொண்டனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் கையை தட்டிவிட்ட கமல்.. மேடையில் நடந்த குழப்பம், என்ன ஆனது? | Kamal Angry On A R Rahman Goes Viral

என்ன நடந்தது? 

இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாக வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த விழாவின் இறுதியில் குழுவாக போட்டோ எடுக்கப்பட்டது. அப்போது, ஏ.ஆர்.ரஹ்மான் கமல் தோளில் கை போட்டுள்ளார்.

இதனால், கமலின் முகம் திடீரென மாறி, ஏ.ஆர்.ரஹ்மானின் கையை பிடித்து தள்ளிவிட்டுள்ளார். தற்போது, இதை கண்ட ரசிகர்கள் ஏன் கமல் இப்படி நடந்து கொண்டுள்ளார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.   

ஏ.ஆர்.ரஹ்மான் கையை தட்டிவிட்ட கமல்.. மேடையில் நடந்த குழப்பம், என்ன ஆனது? | Kamal Angry On A R Rahman Goes Viral