இன்னும் 49 ஆயிரம் திருமணம் செய்வேன்.. கமல்ஹாசன் தக் ரிப்ளை

Kamal Haasan Marriage Tamil Actors
By Bhavya Apr 20, 2025 12:30 PM GMT
Report

 கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். இருப்பினும் உலகநாயகன் பட்டமே வேண்டாம் என அவர் சமீபத்தில் அறிவித்து விட்டார்.

இவர் நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் வெளிவந்தது. ஆனால் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.

கமல்ஹாசன் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு, திரிஷா, அசோக் செல்வன், சானியா மல்கோத்ரா, ஜோஜு ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 5 - ம் தேதி வெளிவர உள்ள நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ஜிங்குச்சா பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது.

இதன் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் இரண்டாம் திருமணம் குறித்து கேள்வி எழுப்ப, அதற்கு கமல் அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்னும் 49 ஆயிரம் திருமணம் செய்வேன்.. கமல்ஹாசன் தக் ரிப்ளை | Kamal Haasan About His Marriage Life Goes Viral

 தக் ரிப்ளை

அதாவது, முன்பு அவர் இது குறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்துள்ளார். பிராமண குடும்பத்தில் இருந்து வந்த நீங்கள் இரண்டு திருமணம் செய்து கொண்டது சரியா என்று கேட்க, அதற்கு பிராமண குடும்பத்தில் இருந்து வருவதற்கும், கல்யாணம் செய்வதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று பதிலளித்துள்ளார்.

மேலும், அவரிடம் உங்கள் தெய்வம் ராமனாச்சே, அப்போது நீங்கள் அவர் போன்று தானே இருக்க வேண்டும் என்று கேட்க, நான் ராமனின் அப்பா போன்று, இன்னும் 49 ஆயிரத்து சொச்சம் பாக்கி உள்ளது என கூறியுள்ளார்.  

இன்னும் 49 ஆயிரம் திருமணம் செய்வேன்.. கமல்ஹாசன் தக் ரிப்ளை | Kamal Haasan About His Marriage Life Goes Viral