காதலரா? இயக்குநருடன் சமந்தா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. விரைவில் குட் நியூஸ்

Samantha Viral Video Actress
By Bhavya Apr 20, 2025 01:30 PM GMT
Report

சமந்தா

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி இன்று உலகளவில் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார் நடிகை சமந்தா. சினிமாவில் கடின உழைப்பை போட்டு முன்னேறி வந்த சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தார்.

தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியவர் நடிப்பில் கடந்த ஆண்டு சிட்டாடல் வெப் தொடர் வெளிவந்து ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

காதலரா? இயக்குநருடன் சமந்தா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. விரைவில் குட் நியூஸ் | Actress Samantha With Her Boyfriend

குட் நியூஸ்

சமந்தாவை வைத்து தி பேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் வெப் சீரிஸ்களை இயக்கியவர்கள் ராஜ் மற்றும் டி.கே. இதில் இயக்குநர் ராஜ் என்பவருடன் நடிகை சமந்தா காதலில் இருப்பதாக சமீப காலமாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

காதலரா? இயக்குநருடன் சமந்தா எங்கு சென்றுள்ளார் பாருங்க.. விரைவில் குட் நியூஸ் | Actress Samantha With Her Boyfriend

பிக்கில் பால் விளையாட்டின் போது இருவரும் கைகோர்த்து எடுத்துக்கொண்ட புகைப்படமும், பார்ட்டி ஒன்றில் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

இதனால் இருவரும் காதலித்து வருகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்ட நிலையில், நடிகை சமந்தா தற்போது இயக்குநர் ராஜ் உடன் திருப்பதி சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.