படையப்பா போல் லிங்கா படத்தை காப்பாதாத ரஜினி? கமல் கூறி அட்வைஸ் தான் காரணம்..

Kamal Haasan Rajinikanth K. S. Ravikumar
By Edward Jul 21, 2022 05:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இரு உச்ச நட்சத்திரங்கள் என்று சொல்லான் எம்ஜிஆர், சிவாஜிக்கு அடுத்தது ரஜினிகாந்தும் கமலும் தான். அப்படி இரு துருவ நட்சத்திரங்களாக இருக்கும் அவர்களுக்கு போட்டிகள் இல்லை என்பது தான் உண்மை. அப்ப்படி இருவரும் ஒவ்வொரு விசயத்திலும் விட்டுகொடுத்து பேசுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.

அப்படி ஒருமுறை விருது விழா ஒன்றில் சந்திரமுகி படத்தில் வித்யாசமான இரு தோற்றத்தில் நடித்திருந்ததை தொகுப்பாளர் பெருமையாக பேசியிருந்தார். அதற்கு ரஜினிகாந்த், என் நண்பர் கமல் ஹாசன் தசாவதாரம் படத்தில் அத்தனை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் நீங்கள் நான் நடித்த இரு கதாபாத்திரத்தை பெருமையாக பேசுகிறீர்கள் என்று கூறினார். அப்படி இருவரும் பெருமையோடு பேசி வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த், கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான படையப்பா படத்தின் நேரம் 3.30 நிமிடங்களாக இருந்து.

இதற்கு இரு இண்டர்வெல் பிளாக் வைக்கலாம் என்று ரஜினிகாந்த் கதையில் முட்டுக்கட்டை போட்டுள்ளார். இதனை கேட்டுள்ள கமல் ஹாசன் அப்படியெல்லாம் வேண்டாம் இயக்குனரிடமே இதை விட்டுவிடுங்கள் நீங்கள் தடையிட வேண்டாம் என்று அட்வைஸாக கூறியிருக்கிறார்.

அப்படி உருவாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது படையப்பா. ஆனால் அதே கே எஸ் ரவிக்குமார் இயக்கிய லிங்கா படத்தில் கதை முழுவதும் ரஜினிகாந்த் மாற்றியும் கிளைமேக்ஸ் சீன் எனக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை என்று கேஎஸ் ரவிக்குமார் சமீபத்தில் புலம்பிய வீடியோ வைரலாகியிருந்தது.