நம்பி வாய்ப்பு கொடுத்த எனக்கே விபூதி அடிக்குற! ஆர்யா மீது கோபத்தில் கமல் ஹாசன்

arya muthaiah kamalhaasan raajkamalproductions
By Edward Apr 12, 2022 12:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். பிக்பாஸ் 5 நிகழ்ச்சிகளுக்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் படப்பிடிப்பினை முழுக்க முடித்துவிட்டார் கமல்.

இதனை அடுத்து இந்தியன் 2 வில் கவனம் செலுத்த விருக்கும் கமல் ஹாசன் ஆர்யாவை வைத்தும் சிவகார்த்திகேயனை வைத்தும் தனித்தனியாக படங்களை தயாரிக்கவுள்ளார். அதில் நடிகர் ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ஒரு படத்தினை தயாரிக்கவுள்ளார்.

இப்படத்திற்காக ஆர்யாவிற்கு கமல் 15 கோடி சம்பளமாக கொடுக்கவுள்ளனர். இந்நிலையில் கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஆர்யாவிற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாம்.

இதனால் ஆர்யா இப்படத்தினை கைவிட்டுள்ளாராம். பின் இயக்குனர் முத்தையாவிடம் கதை நன்றாக இருக்கிறது நாம் ஏன் வேறொரு தயாரிப்பாளரை வைத்து இந்த கதையை பண்ணக்கூடாது என்று கூறியுள்ளாராம். அதற்கு முத்தையாவும் ஓகே கூறியுள்ளாராம்.

இதனால் கடும் கோபத்தில் கமல் ஹாசன் ஆர்யா மீது கோபத்தில் இருக்கிறாராம். பெரும்பாலும் இந்த பிரச்சனைக்கு ஆர்யாவின் 15 கோடி சம்பள விஷயம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.