கமல் சொல்லியதெல்லாம் பொய்யா? விக்ரம் படத்தை வைத்து மூடி மறைந்த பிக்பாஸ் குழு..

biggboss simbu kamalhaasan biggbossultimate
By Edward Mar 02, 2022 01:25 PM GMT
Report

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியாக கருதப்படுவது பிக்பாஸ். வெளிநாட்டில் ஆரம்பித்த இந்நிகழ்ச்சி பாலிவுட் ஆரம்பித்து இந்தியாவில் பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. தென்னிந்திய சினிமாவில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஒளிப்பரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் ஒரு வார சம்பளமாக பெற்று வருகிறார்கள்.

அதிலும் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை வாரி வழங்கி வருகிறது. பிக்பாஸ் தமிழில் 5 ஆண்டுகளுக்கு நடிகர் கமல் ஹாசன் ஒரு சீசனுக்கு 14 கோடி வீதம் 50 கோடிக்கும் மேல் சம்பளமாக பெற்றுள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் 5 சீசனுக்கு முடிந்த சில வாரத்திலேயே பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஆரம்பமானது.

அதையும் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கையிருப்பில் இருக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பிற்கும் சக நட்சத்திரங்களின் கால்ஷீட்டிற்கும் இடைஞ்சலாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இருப்பதாக கூறி கமல் ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவெடுத்து அறிக்கையும் வெளியிட்டார். அதன்பின் அவருக்கு பதில் நடிகர் சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற தகுந்த காரணமாக கூறியது கமலின் பொய்யாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த நாளில் இருந்து கமலின் காட்சிகள் முழுவதும் முடிந்தது. சமீபத்தில் கொரோனா லாக்டவுனிற்கு பிறகு சக நட்சத்திரங்களில் காட்சிகள் முடிந்தது. ஆரம்பத்தில் படப்பிடிப்பு 56 நாட்கள் என்று தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் 110 நாட்களை தாண்டி இழுத்தடித்துள்ளது. இருந்தாலும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்டது என்று லோகேஷ் கனகராஜ் மற்றும் பகத் பாசில் உட்பட்ட படக்குழு துப்பாக்கி சத்தம் முழங்க செய்தியை அறிவித்தனர்.

இப்படி இருக்கையில் பிக்பாஸ் அல்டிமேட் வேறொரு ரூட்டிற்கு செல்வதை அறிந்து கமல் ஹாசனுக்கும் நிகழ்ச்சி குழுவிற்கும் இடையில் வாக்குவாதம் அதிகமாகி கமலுக்கு மனக்கசப்பு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

இதனால் தான் கமல் ஹாசன் அந்த பொய்யை கூறி நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறாராம்.