அந்த ஒல்லி நடிகருக்காக ஸ்ரீதேவி மகளுக்கு வலை போடும் கமல்!! சைலெண்ட்டாக வேலைபார்க்கும் விக்னேஷ்
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் கமல் ஹாசன், விக்ரம் படத்திற்கு பின் இந்தியன் 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய அடுத்த படங்கள் மற்றும் தயாரிப்பு விசயங்களில் கவனம் செலுத்தியும் வருகிறார்.
அந்தவகையில் சமீபத்தில் கமல் ஹாசனின் 223வது படத்தினை இயக்குனர் எச் வினோத் இயக்கவுள்ளார். 233வது படத்தினை தயாரித்து நடிக்கும் கமல் ஹாசன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந்நிலையில் தன்னுடைய தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. லவ் டுடே படத்திற்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன் தாரா பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக செய்தி வெளியானது.
ஆனால், நயன்தாராவை விட்டுவிட்டு வளர்ந்து வரும் நடிகையும் நடிகை ஸ்ரீதேவியும் மகளுமான ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார்களாம்.
ஏற்கனவே தென்னிந்திய சினிமாவில் ஜூனியர் என் டி ஆர் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் ஜான்வி கபூர். அப்படி இருக்கும் நிலையில் கமல் ஹாசனும், விக்னேஷ் சிவனும் சைலெண்ட்டாக இந்த வேலையை நகர்த்தி வருகிறார்.