பிக்பாஸ்-ல் இனி கமல் இல்லை! அவருக்கு பதில் யார்?
பிரபல தொலைக்காட்சி சேனல் கடந்த 5 ஆண்டுகளாக ஒளிப்பரப்பு செய்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். மக்கள் அனைவரும் ஆவலோடு தினமும் எதிர்ப்பார்க்கப்படும் பிக்பாஸ் 5 சீசன் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு முடிவடைந்தது. இதை தொடர்ந்து பிரபல ஓடிடி தளமனா டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து பிரபல தொலைக்காட்சி சேனல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.
20 நாட்களுக்கு மேலாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியையும் கமல் ஹாசன் ஞாயிறு எபிசோட்டினை தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் தற்போது அந்நிகழ்ச்சியில் இருந்து கமல்ஹாசன் விலகிக்கொள்வதாக அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
இந்தியன்2, விக்ரம் போன்ற படப்பிடிப்பும் பிற தயாரிப்பு பணிகளும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியால் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது . இதனால் பிற முக்கியமான நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேதிகளையும் மாற்றியமைக்கப்ட வேண்டிய நிலை ஏற்படுவதால் பிக்பாஅஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த பிக்பாஸ் 6ல் சந்திப்போம் என்றும் தெரிவித்துள்ளார். இப்படி கமல் ஹாசன் விலகுகையில் அடுத்து கமல் ஹாசன் இடத்தினை யார் பிடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கமல் பெருந்தொற்று பாதிப்பில் இருந்த போது நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். அதேபோல் பிக்பாஸ் அல்டிமேட்டின் ஞாயிறு நிகழ்ச்சியை அவர் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு.
— Kamal Haasan (@ikamalhaasan) February 20, 2022
After a short break. pic.twitter.com/NfbUMz1GjY