கேபாலச்சந்தர் மகளிடமே அப்படி நடந்துகொண்ட கமல்!! அவர் மட்டும் உயிரோடு இருந்தால் அப்படி செய்து இருப்பாரா?

Kamal Haasan Actors Tamil Actors K. Balachander
By Dhiviyarajan May 23, 2024 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் கே பாலச்சந்தர். இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் கமல் ஹாசன், ரஜினிகாந்த், விவேக், பிரகாஷ் ராஜ் போன்ற பல பிரபலங்களை இவர் தான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அந்தணன், "சினிமாவில் பிரபலங்கள் ஒரு பெரிய இடத்திற்கு வந்து விட்டால் பழைய விஷயங்களை மறந்துவிடுவார்கள். உதாரணத்திற்கு கே பாலசந்தர் உயிரோடு இருக்கும் போது இந்த திரைத்துறை அவருடைய குடும்பத்திற்கு எப்படி மரியாதையை கொடுத்தது அதை நாம் பார்த்து இருப்போம்".

"அதே பாலசந்தர் மகள் வீட்டில் ஒரு விஷேஷம் நடந்தது. அதற்கு அவரது மகள், இன்விடேஷன் கொடுப்பதற்காக ரஜினிகாந்த் வீட்டிற்கு அப்பாயிண்ட்மென்ட் வாங்கி இருக்கிறார். உதரணத்திற்கு 12 மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்த ரஜினி, பாலசந்தர் மகள் வீட்டிற்கு வருவதற்கு முன்பே வாசலில் காத்துகொண்டு இருந்தார். ஆனால் கமல் ஹாசன் 12 மணிக்கு அப்பாயிண்ட்மென்ட் கொடுத்து 4 மணிக்கு தான் வந்து சேர்த்தார். கே பாலச்சந்தர் உயிரோடு இருந்தால் அப்படி செய்து இருப்பாரா? என்று அந்தணன் கூறியுள்ளார்.   

கேபாலச்சந்தர் மகளிடமே அப்படி நடந்துகொண்ட கமல்!! அவர் மட்டும் உயிரோடு இருந்தால் அப்படி செய்து இருப்பாரா? | Kamal Haasan Disrespected K Balachander Daughter