பிக்பாஸ் 7-காக இத்தனை கோடி சம்பளத்தை அள்ளும் உலக நாயகன்!! இது நம்ம லிஸ்ட்ல இல்லையே
Kamal Haasan
Bigg Boss
Star Vijay
Tamil Actors
By Edward
தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வரும் கமல் ஹாசன் விரைவில் பிக்பாஸ் 7 சீசனையும் தொகுத்து வழங்கவுள்ளார்.
கடந்த 6 சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் பிக்பாஸ் அல்டிமேட் சீசனையும் தொகுத்து வழங்கி வந்தார்.
தற்போது விரைவில் பிக்பாஸ் 7 சீசனும் ஆரம்பமாகவுள்ள நிலையில் கமல் ஹாசனின் பிக்பாஸ் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு படத்திற்கு 50ல் இருந்து 80 வரை சம்பளமாக பெற்று வரும் கமல் ஹாசன் பிக்பாஸ் 7 நிகழ்ச்சிக்காக சுமார் 130 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம்.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க நடிகர் சல்மான் கான் ஒரு வாரத்திற்கு 25 கோடி என மொத்தம் 350 கோடி சம்பளமாக பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.