அறைக்குள் சென்றால் என்ன செய்வேனென கவுதமிக்கு மட்டும் தான் தெரியும்!..கமல் ஓபன் டாக்
நடிகர், பாடகர், நடன கலைஞர் பல பன்முகங்களை கொண்டவர் தான் உலக நாயகன் கமல் ஹாசன். தற்போது இவர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கிறார். இப்படத்திற்காக இவர் ரூபாய் 150 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பங்கேற்ற கமல் ஹாசன் விஸ்வரூபம் படம் வெளியாகும் போது நடந்த பிரச்சனைகளை குறித்து பேசி இருந்தார்.
அதில் அவர், விஸ்வரூபம் பிரச்சனையின் போது கோபத்துடன் வந்த என்னுடைய அறைக்குள் சென்று தூங்கிவிட்டேன். எனக்கு கோபமாக இருந்தாலே உடனே அறைக்குள் சென்று தூங்கிவிடுவேன். இந்த விஷயம் கவுதமிக்கு தெரியும் என்று கமல் ஹாசன் கூறி இருந்தார். தற்போது அந்த வீடியோ ரசிகர்களால் வைரலாகி வருகிறது.