உருகிஉருகி காதலித்த உலகநாயகன்!! ஸ்ரீவித்யாவை கமல் ஹாசன் கல்யாணம் பண்ண முடியாத காரணம்..

Kamal Haasan Srividya Gossip Today Tamil Actors Tamil Actress
By Edward Jan 03, 2024 06:30 AM GMT
Report

நடிகர் கமல் ஹாசனின் ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் இருந்து தற்போது வரை ஏதாவது ஒரு நடிகையுடன் தொடர்புபடுத்தி செய்திகள் வந்து கொண்டிருக்கும். அப்படி தான் நடிகை ஸ்ரீவித்யாவுடன் காதலில் இருந்து பின் பிரிந்திருக்கிறார் கமல் ஹாசன். அதற்கு காரணம் ஸ்ரீவித்யாவின் அம்மா தான் என்று கூறப்பட்டு வந்தது.

உருகிஉருகி காதலித்த உலகநாயகன்!! ஸ்ரீவித்யாவை கமல் ஹாசன் கல்யாணம் பண்ண முடியாத காரணம்.. | Kamal Haasan Talking About Srividya Love Failure

இந்நிலையில், கமல், ஸ்ரீவித்யா தனித்தனியாக கொடுக்கப்பட்ட பேட்டியில் காதல் பற்றி பகிர்ந்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கமல் ஹாசனை தொகுப்பாளினி டிடி எடுத்த பேட்டியில், ஸ்ரீவித்யாவுடன் நடித்த காட்சியை காட்டி, அதுபற்றி கேட்டிருக்கிறார்.

உருகிஉருகி காதலித்த உலகநாயகன்!! ஸ்ரீவித்யாவை கமல் ஹாசன் கல்யாணம் பண்ண முடியாத காரணம்.. | Kamal Haasan Talking About Srividya Love Failure

அதற்கு கமல், நான் 19 வயதில் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்தேன். அப்படத்தில் நடிக்கும் போது நான் திறமையானவன் என்பதை எனக்கு உணர்த்தியதே ஸ்ரீவித்யா தான். அவர் என் தோழி மட்டுமில்லை என் அன்பு காதலி, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அது கல்யாணத்தில் தான் முடியணும் என்றெல்லாம் அவசியம் இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல் ஸ்ரீவித்யா ஒரு மலையாள பேட்டியொன்றில், நானும் கமல் ஹாசனும் காதலித்த விசயம் சினிமாத்துறையில் எல்லோருக்கும் தெரியும். ஆரம்பத்தில் இரு வீட்டிலும் சம்மதம் தான் சொன்னார்கள்.

முதல் படத்திலேயே அந்த இடம் தெரிய நடித்தேன்!! அஜித் மச்சான் ரிச்சர்ட்டை காதலித்த நடிகை ஷகீலா...

முதல் படத்திலேயே அந்த இடம் தெரிய நடித்தேன்!! அஜித் மச்சான் ரிச்சர்ட்டை காதலித்த நடிகை ஷகீலா...

அதன்பின் என் அம்மா கமல் ஹாசனிடம் நீங்க இரண்டு பேரும் நல்ல நடிகர்களாக இருப்பதால் இப்போது திருமணம் செய்தால் உங்கள் வாழ்க்கை கெட்டுப்போய்விடும் என்று கூறியதாகவும் கோபத்தில் கமல் சென்று கொஞ்ச நாள் பேசமால் இருந்தார்.

அந்நேரத்தில் தான் திடீரென அவருக்கு கல்யாணமானதாகவும் அது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது என்றும் ஸ்ரீவித்யா கூறியிருக்கிறார்.