பிச்சைக்காரன் மாதிரி புண்ண காட்டி காசு வாங்க மாட்ட? வாய் கொடுத்து மாட்டிக்கொண்ட கமல் ஹாசன்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் உருவான படம் விக்ரம். முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்த இப்படம் கடந்த ஜூன் 3 ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படத்துள்ளது.
இப்படத்தின் பாடல்களாகியும் அனிருத் இசையாகியும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 50 வது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய கமலின் வீடியோ வைரலானது.
மேலும் பரத்வாஜ் ரங்கன் அவர்கள் எடுத்த பேட்டியில், உங்களுக்கு கஷ்டமான படம் என்றால் என்ன என்று கேட்டுள்ளார். உடல் அளவில் பயிற்சி பெறுவதை கஷ்டம்ன்னு சொல்றது நோ பைன் நோ கெய்ன் தான் முதல் ரூல் என்றும் எனக்கு வேர்த்தது இடுப்பு வலுச்சது இதெல்லாம் போய் பார்வையாளர்களிடம் சொல்ல முடியாது.
அவங்க பார்க்கும் போது நல்ல ஆடுறது தெரிஞ்சா போதும். பிச்சைக்காரன் மாதிரி புண்ண காட்டி காசு வாங்க மாட்டேன் திறமையை காட்டி தான் காசு வாங்குவேன் என்று கூறியுள்ளார்.
நண்பர் தாறுமாறாக தாக்கப்பட்டு இருக்கிறார் ?
— RamKumarr (@ramk8060) August 5, 2022
pic.twitter.com/yvAy7edAnk
ஆனால் இதே கேள்வி டிடி நிகழ்ச்சியின் போது தன்னுடைய காலில் ராடு வைத்திருந்து ரெண்டு மூணு சிகிச்சை பண்ணாங்க என்று கூறியுள்ளார். இதனை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
அது வேற வாய் இது நாற வாய் ?#AjithKumar #AK61 pic.twitter.com/ZLqKKQlSur
— ?????? ????? ? (@SamratAjithFC) August 5, 2022