தளபதிக்கு அமையாத கொடுப்பினை கமல் ஹாசனுக்கா? பிரம்மாண்டத்தின் உச்சியில் பிளான் போட்ட ஆண்டவர்
நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தினை இயக்கியுள்ளார். மிகப்பெரியளவில் உருவான இப்படத்தினை ராஜ் கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் ஜூன் 10ல் வெளியாக திட்டமிட்டுள்ளனர்.
படத்தின் பிரமோஷன் பணிகள் மும்முரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் டிரைனில் விக்ரம் படத்தின் போஸ்டர்கள் பதியப்பட்டு பிரம்மாண்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் கமல் - லோகேஷ்.
இந்நிலையில் சில காரணங்களால் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஆடியோ லான்ச் நடைபெறாமல் கேன்சல் செய்தனர். இதற்கு விஜய்யின் அரசியல் பேச்சு தான் முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் கூறப்பட்டது.
தற்போது விக்ரம் படத்தின் ஆடியோ லான்ச்-ஐ நடத்த கமல் ஆர்வம் காட்டி வருவதாகவும், அதற்கான அனுமதியினை முதல்வர் முக ஸ்டாலினிடம் பெற்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
சென்னை நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்ட முறையில் வரும் மே 15 முதல் 20 தேதிகளுக்கும் நடத்த பிளான் போடப்பட்டுள்ளதாம்.
மேலும் நிகழ்ச்சியில் உலக நாயகன் தனிப்பட்ட மற்றும் அரசியல் சம்பந்தப்பட்ட பேச்சுகளை பல ஆண்டுகள் கழித்து பேசவுள்ளதால் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆரவத்துடன் எதிர்ப்பார்த்து வருகிறார்கள்.
அரசியல் பிரமுகர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் கலந்து கொண்டு பெரிதாக பேசப்பட்டு வருகிறது.