விவாகரத்தாகிய நடிகையுடன் ஜிம்மில் ஒர்க்கவுட்!! வைரலாகும் கமல் ஹாசன் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து மக்கள் மத்தியில் உலக நாயகனாக திகழ்ந்து வருபவர் நடிகர் கமல் ஹாசன். தற்போது இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.
கமல் ஹாசன் என்றாலே அப்போதில் இருந்தே பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டும் வந்தார். சமீபகாலமாக கூட தன்னுடன் நடித்த நடிகைகளுடன் நெருக்கமாக இருந்தார் என்றும் கூறப்பட்டது.
அப்படி ஆண்ட்ரியா, பூஜா குமார் உள்ளிட்ட நடிகைகளும் அடங்கும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை அமலா பால் இயக்குனர் ஏ எல் விஜய்யை விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்.
சில படங்களில் நடித்து வரும் அமலா பால், சில ஆண்டுகளுக்கு முன் கமல் ஹாசன் அவர்களுடன் ஜிம்மில் ஒர்க்கவுட் செய்துள்ளனர். அங்கு அவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
