கிணற்றுக்குள் நடிகையுடன் ரொமான்ஸ் காட்சி!! பொறாமையில் பொங்கும் நெட்டிசன்கள்..
சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சிங்கிள் பசங்க. மணிமேகலை தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில், டி ராஜேந்தர் மற்றும் நடிகை கனிகா நடுவராக இருந்து வருகிறார்கள்.
நிகழ்ச்சியில் நடிகையுடன் சிங்கிள் பசங்களாக போட்டிப்போடுபவர்களில் ஒருவர் தான் கூமாப்பட்டி தங்கபாண்டி. ஏங்க என்று கூறி தமிழகம் முழுவதும் பிரபலமான இவர், நடிகை சாந்தினியுடன் ஜோடிபோட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன் சூரியவம்சம் பட சலக்கு சலக்கு என்ற பாடலுக்கு ஆட்டம் போட்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த வாரம் இஞ்சி இடுப்பழகி என்ற தேவர் மகன் பட பாடலுக்கு இருவரும் ஆடியுள்ளனர்.
கூமாப்பட்டி தங்கபாண்டி
அப்பாடலுக்கான ஷூட்டிங் காட்சி வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். கிணற்றுக்குள் நடந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் கூமாப்பட்டி தங்கபாண்டி, நீ போகாத எல்லைத்தாண்டி என்று பொறாமையில் பொங்கியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.