அட்டர் காப்பியில் அட்லீயை மிஞ்சிய இயக்குனர் மணிரத்னம்!! கமல் பிறந்தநாளுக்கு இப்படியா நடக்கணும்..
பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பின் இயக்குனர் மணிரத்னம் உலக நாயகன் கமல் ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
சில நாட்களுக்கு முன் இந்த கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்தும் யார் யார் நடிக்க போகிறார்கள் என்ற தகவல்களையும் கொடுத்து வந்தனர்.
திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் நடிக்க போகும் நிலையில் இப்படத்தின் டைட்டில் என்ன என்று நேற்று மாலை 5 மணிக்கும் வீடியோ மூலம் அறிவித்தனர்.
Thug Life என்ற பெயரில் கமல் ஹாசன் ரங்கராய சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் சில காட்சிகள் Rise of skywalker (2019) என்ற படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் கலாயத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இயக்குனர் மணிரத்னமும் காப்பி படம் எடுக்கிறாரா என்றும் கமல் பிறந்தநாளுக்கு இப்படியொரு ஷாக்கா கொடுப்பீங்க என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஹாலிவுட் தரத்திற்கு யோசிச்சு உழைக்குறாங்க… மேன்மக்கள் மேன்மக்களே… pic.twitter.com/Eu2TkJoIrw
— leninbharathi (@leninbharathi1) November 7, 2023
