கமலை பிரிந்த நிலையில் அதில் கெளதமி கிடையாதா? கமல்ஹாசனுக்கு ஜோடி யார் தெரியுமா.?

meena kamalhaasan gawthami drishyam2 papanasam2
By Edward Jun 16, 2021 02:03 AM GMT
Edward

Edward

Report

மலையாள படமான திரிஷ்யம் படத்தின் ரீமேக்காக இப்படம் வெளியானது. மோகன்லால் - மீனா நடிப்பில் மலையாள சினிமாவில் பெரிய வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. அதனால் தமிழில் சமீபத்தில் கமல் - நடிகை கெளதமி நடித்த படம் பாபநாசம் படம் வெளியானது.

தற்போது திரிஷ்யம் 2 வில் மோகன்லால் - மீனா கூட்டணி சேர்ந்து சமீபத்தில் படம் வெளியாகி சக்கைபோடு போட்டுள்ளது. அதன் வெற்றியை அடுத்து தமிழில் பாபநாசம் 2 வும் ரீமேக் செய்யவுள்ளதாம். அதிலும் கமல்ஹாசன் தான் நடிக்கவுள்ளாராம். ஏற்கனவே, இந்தியன் 2 மற்றும் லோகேஷ் கனகராஜின் விகரம் படத்திலும் பிஸியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், 30 நாட்கள் மட்டுமே பாபநாசம் 2-விற்காக கால்ஷீட் கொடுத்துள்ளார் கமல்ஹாசன். பாபநாசம் 2 படத்தை ஜீத்து ஜோசப் இயக்க, நடிகை ஸ்ரீபிரியா தயாரிக்க உள்ளாராம்.இப்படத்திற்காக சக நடிகர் நடிகைகள் பேசப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் கெளதமி நடித்திருந்ததால் கமல்ஹாசனுக்கு ஜோடி யார் என்று கேள்விகள் எழுந்துள்ளது.

அதற்கு காரணம் கமல்ஹாசனை விட்டு நடிகை கெளதமி பிரிந்துவிட்டதால் அவருக்கு பதில் யார் என்றுதான் குழப்பத்தில் இருக்கிறார்கள் படக்குழு. இந்நிலையில், திரிஷ்யம் 2 படத்தில் நடித்த மீனாவை கமல் ஹாசனுடன் ஜோடியாக நடிக்க வைக்கலாமா என்ற திட்டத்தில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர். இது உறுதியாகி விட்டால் 30 நாட்களில் கமலஹாசன் படப்பிடிப்பை முடித்து விடுவாராம்.