நள்ளிரவு 2 மணிக்கு காலில் விழப்போன ரஜினி!! 33 வருட ரகசியத்தை மறைத்து வந்த கமல் ஹாசன்..
தமிழ் சினிமாவில் இரு துருவ நட்சத்திரங்களாக விளங்கி வருபவர்கள் ரஜினி - கமல். இருவரும் நடிப்பை தாண்டி சிறந்த நண்பர்களாகவும் திகழ்ந்து வருகிறார்கள். ரஜினிகாந்த் எதாவது ஒரு முடிவை எடுக்க கமலிடம் சொல்லி தீர்வு கண்டப்பின் தான் முடிவெடுப்பாராம்.
அப்படிவொரு நம்பிக்கையை கமல் ஹாசனிடம் வைத்திருக்கும் ரஜினிகாந்தை தற்போது யோகி ஆதித்யநாத் காலில் விழுந்ததை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். இதற்கான விளக்கமும் ரஜினிகாந்த் கூறிய நிலையில் ஒரு காலத்தில் கமல் காலில் விழப்போன ரஜினி என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
வயதில் சிறியவராக இருந்தாலும் நல்ல விசயம் செய்தவரை பாராட்ட வேண்டும் என்றும் அவர்கள் காலில் விழுவதுகூட தப்பில்லை என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் 33 வருடத்திற்கு முன் கமல் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தில் இரவு 11 மணிக்கு படக்குழுவினர் போட்டுக்காட்டியுள்ளனர்.
படத்தை பார்த்து பூரித்துபோன ரஜினி நள்ளிரவு 2 மணிக்கு காரில் கமல் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பாராட்ட நள்ளிரவுக்கு சென்ற ரஜினி, கமலை பார்த்து உங்க காலில் விழந்தால் கூட தப்பில்லை என்று காலில் விழச்சென்றாராம். அப்புவாக நடித்ததை நினைத்து பூரித்துப்போன எப்படி நடிக்க முடிந்தது என்று ரஜினி கேட்க கமல் மழுப்பியிருக்கிறார்.
இந்த ரகசியத்தை கமல், ரஜினி உள்ளிட்ட யாரிடமும் கூறாமல் மறைத்து வருகிறார். அப்படி தான் பார்க்கும் படம் சிறப்பாக இருந்தால் கூட உடனே அந்த படக்குழுவினரை சந்தித்தோ காலில் பேசியோ பாராட்டும் மனமுள்ளவர் ரஜினி. இதனால் தான் ஆதித்யநாத் ஒரு சந்நியாசி என்பதால் காலில் விழுந்தேன் என்றும் ஓப்பனாக கூறியிருக்கிறார்.