வேலை செய்ய வக்கு இல்ல!! பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறியது இவர்தான்..
பிக்பாஸ் சீசன் 9
பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை நடிகர் விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். 48 நாட்கள் கடந்த நிலையில், போட்டியாளர்களுக்கு 3 அணிகளாக பிரிந்து அவர்களுக்கு போட்டிகள் வழங்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த வாரங்கள் திவாகர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் எவிக்ட்டாகி யார் பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேறுவார் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது.
இந்நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று கெமி (விஷாலி கெமிகர்) பிக்பாஸ் சீசன் 9 வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவின், ஹாய் படத்தில் நயன் தாராவுடன் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் கெமி. நயன் தாரா மேம் டேட் எங்களுக்கு கிடைச்சிடுச்சு, ஆனால் கெமி டேட் தான் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் சொன்னதை அடுத்து கெமி இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி ஹாய் படத்தில் விரைவில் இணையவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து விஜய் சேதுபதி, சாண்ட்ரா மற்றும் திவ்யாவை ரோஸ்ட் செய்த பிரமோ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களின் கவனத்தை அதிகரித்துள்ளது.
