அப்பா அம்மா விவாகரத்து சர்ச்சை பேச்சு! எந்த மகளாவது அப்படி சொல்வாரா? கமல் மகள் ஸ்ருதி..
வாரிசு நடிகையாக தற்போது தமிழ், தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். உலக நாயகன் கமல் ஹாசனின் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி பின் 3, 7ஆம் அறிவு படத்தின் மூலம் நடிகையானார்.
இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று வருகிறார். கொரோனா லாக்டவுன் என்பதால் படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் வீட்டிலேயே காதலருடன் கழித்து வருகிறார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அப்பா அம்மா பிரிந்தால் சந்தோஷம் என கூறி இருந்தார் என்று வைரலாகியது.
இதை கேட்ட ஸ்ருதி கோபப்பட்டு பேசியுள்ளார். கொரோனா எந்த மதம் நிறம் என்று பார்க்காது, சுய ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் காக்கும் என்று கூறியுள்ளார். மேலும், என் அப்பா, அம்மா பிரிந்தால் சந்தோஷம் என நான் கூறியதாக வந்த தகவல் தவறு. எந்த மகள் அப்படி சொல்வார்களா? என்றும் நான் சொல்லியதை முழுமையாக படியுங்கள் என்று கூறியுள்ளார்.
இருவரும் இணைந்து இருந்த போது சந்தோஷமாக இல்லை. ஆனால் பிரிந்த பின் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அதற்கு காரணம் சில ஆண்டுகளில் அவர்களுக்கு மனது ஒத்துப்போகவில்லை. அதன் காரணமாகவே பிரிந்தது மகிழ்ச்சி என கூறினேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அப்பா தயாரிப்பில் விக்ரம் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வரவில்லை.
வித்யாசமான ரோல் எனக்கு தமிழில் கிடைக்கவில்லை. அனைவருக்கும் கஷ்டங்கள் இருக்கும் அதுலும் பணக்கஷ்டம் எனக்கு இருக்கிறது, நான் பெரிய பணக்காரி இல்லை. நான் சுயமாக சம்பாத்து வாழும் பெண்ணாக இருக்கிறேன்.
தடுப்பூசி மட்டுமே, இந்த கொரோனாவை தடுக்கும். அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ருதி ஹாசன்.