லோகேஷ் கனகராஜை வைத்து விஜய்க்கு அச்சானி போடும் ஆண்டவர்! கமல் ஹாசன் கண்டுக்கொள்ளாத தளபதி..

Kamal Haasan Visu Lokesh Kanagaraj
By Edward May 11, 2022 07:37 AM GMT
Report

நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66ல் ஹைதரபாத்துக்கு பறந்து படப்பிடிப்பினை ஆர்ம்பித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் தியேட்டரில் வெளியாக வேண்டும் என்பதற்காக தீவிரமான வேலைகள சென்று கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜுடன் மீண்டும் இணையவுள்ளார் நடிகர் விஜய். லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசன் கூட்டணி விக்ரம் படம் வரும் ஜூன் மாதம் உலகளவில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ளது.

படத்தின் பிரமோஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பிடித்தமான இயக்குனர் என்று கமல்ஹாசனிடம் நல்ல இடத்தினை பிடித்துள்ளார் லோகேஷ் கனராஜ். இதனால் தம்முடைய நட்பு அதிகரிக்க லோகேஷ் கனராஜ் படத்தினை ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் பிரடொக்‌ஷனில் ஒரு படத்தினை தயாரிக்க கேட்டுள்ளாராம்.

அதனால் தளபதியை வைத்து 67 அல்லது 68ஐ இயக்கவிருக்கும் லோகேஷ் கனகராஜிடம் கேட்டுள்ளாராம் கமல்ஹாசன். இதற்க்காக லோகேஷ் கனராஜும் ஹைதரபாத் சென்று இதுபற்றி கேட்டிருப்பதாகவும் விஜய் கண்டிப்பாக பண்ணலாம்.

ஆனால் இந்த படம் வேண்டாம் வேறொரு படம் பண்ணலாம் என்று ஏமாற்றமளித்துள்ளாராம்.

கமல் ஹாசன் கேட்டால் எதுவும் செய்ய தயக்கம் காட்டாமல் ஓகே கூறுவார் என்று பலர் எதிர்ப்பார்த்ததற்கு விஜய் இப்படியொரு பதிலளிப்பார் என்று யாராலும் நம்பமுடியவில்லையாம். இச்செய்தி இணையத்தில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது.