அந்த விசயத்திற்கு கமல் ஹாசன் பின்னால் இருக்கும் நடிகரின் மனைவி!! யாரு தெரியுமா!!
தமிழ் சினிமாவில் உலக நாயகன் என்று புகழப்படும் கமல் ஹாசன் தற்போது இந்தியன் 2 படத்தின் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் படங்களில் தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிப்பு தாண்டி கமல் ஹாசன் அமெரிக்காவில் கதர் ஆடைகள் வடிவமைக்கும் பிஸ்னசை செய்தும் வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் வெளிநாட்டு பயணம், விருது விழாக்கள் போன்ற பல்வே நிகழ்ச்சிகளுக்கு அட்டகாசமான உடைகளை அணிந்து செல்கிறார்.
இதனை பார்த்து கமல் ஹாசன் ரசிகர்களே மிரண்டு போய் ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். அப்படி கமல் ஹாசன் இப்படி தோன்ற பின்னணியில் ஒருவர் இருக்கிறாராம்.

அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனிப்பட்ட விதத்தில் காஸ்டியூம் டிசைனர்கள் இருப்பது போன்று கமலுக்கு காஸ்டியூம் டிசைனர் இருக்கிறார்.
அவர் வேறு யாரும் இல்லை சீரியல் நடிகர் ராம்ஜியின் மனைவியும் ஆடை வடிவமைப்பாளருமான அம்ரிதா ராம் தான். கமல் ஹாசன் இப்படியொரு பொலிவுக்கு காரணம் அம்ரிதா ராமின் ஆடைவடிவமைப்பு தான் முக்கிய பங்காற்றி வருகிறது.

