எப்பா லோகேஷ் சர்ப்ரைஸே போதுமா! கமலை கையெடுத்து கும்பிடும் இயக்குனர்..
பொதுவாக உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் படங்களிலும் சரி இயக்கி மற்றும் தயாரிக்கும் படங்களிலும் சரி டெக்னாலஜி ஒர்க்கவுட் சூப்பராக இருக்கும். அதற்காக கமல்ஹாசன் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்துவார். அப்படி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படம் மிகுந்த ஆர்வத்துடன் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் சில காட்சிகளில் புதிய தொழில் நுட்பங்களில் வேலைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் பழைய விக்ரம் படம் சையின்ஸ் சம்பந்தப்பட்ட பல விஷயங்களை நாம் பார்த்திருப்போம். அதேபோல் விக்ரம் திரைப்படத்தில் கமல் டி ஏஜிங் சம்பந்தப்பட்ட டெக்னாலஜியை பயன்படுத்தி இருக்கிறாராம்.
இதைப் பார்த்து மெர்சலான லோகேஷ் ஆண்டவரே நீங்கள் தான் ஒரிஜினல் என கையெடுத்து கும்பிட்டு வருகிறாராம். கதைப்படி இந்த படத்தில் இடம்பெறும் பிளாஷ்பேக் காட்சிகளில் இதற்கு முந்தைய விக்ரம் திரைப்படத்தில் இருப்பதுபோல் கமல் மிகவும் இளமையாக வர இருக்கிறாராம்.
அதற்காக கமல் ஹாசன், ஐரிஷ்மேன் உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட டெக்னாலஜியை இதில் பயன்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பல சர்ப்ரைஸ்கள் லோகேஷ் கொடுக்கிறாரோ இல்லையோ அவருக்கு உலக நாயகன் சூப்பரான சர்ப்ரைஸ் விஷயங்களை கொடுப்பதால் சாமி போதும் என்று கும்பிட்டு வருகிறாராம் லோகேஷ்.