106 வயதில் எப்படி இதெல்லாம்.. இந்தியன் தாத்தா சர்ச்சை!! தரமான பதிலடி கொடுத்த கமல் ஹாசன்..

Kamal Haasan Shankar Shanmugam Gossip Today Indian 2
By Edward Jun 29, 2024 07:30 PM GMT
Edward

Edward

Report

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன், எஸ் ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களில் நடித்து உருவாகியுள்ளது இந்தியன் 2 படம் கடந்த 2019ல் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு கிரேன் விபத்து, கொரானா லாக்டவுன் என்று தாமதமாகி தற்போது ஒருவழியாக ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளது.

106 வயதில் எப்படி இதெல்லாம்.. இந்தியன் தாத்தா சர்ச்சை!! தரமான பதிலடி கொடுத்த கமல் ஹாசன்.. | Kamalhaasan Gives Reply To Asking Senapathy S Age

படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் இந்தியன் தாத்தா குறித்து சில சந்தேகங்கள் எழுந்துள்ளது. 1918ல் சேனாபதி பிறந்ததாக காட்டப்பட்டதை பார்த்தால் அவருக்கு 106 வயதாகிறது. இந்த வயதில் எப்படி அவரால் சண்டை போட முடியும் என்று கேள்வி எழுப்பினர்.

சேனாபதி வர்ம கலை பயின்றவர், ஆரோக்கியமான உணவு, சுய ஒழுக்கம், யோகா என்று கடைப்பிடித்தால் வயதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்று இயக்குனர் சங்கரே மேடையில் பகிர்ந்திருந்தார்.

106 வயதில் எப்படி இதெல்லாம்.. இந்தியன் தாத்தா சர்ச்சை!! தரமான பதிலடி கொடுத்த கமல் ஹாசன்.. | Kamalhaasan Gives Reply To Asking Senapathy S Age

இந்நிலையில், சேனாபதி வயது சர்ச்சை குறித்து கமல் அளித்த பேட்டியொன்றில், இதுபோல் கேள்வி எழுப்பி சங்கடப்படுத்தும் நபர்களை நான் தவிர்க்க விரும்புகிறேன். சூப்பர் மேன், ஹனுமான் போன்றவர்களின் வயதை யாரும் கேட்கவில்லை.

ஹனிமான் எல்லா இடங்களில் சுற்றியும், யுகங்கலை கடந்து வருகிறார். அதனால் தான் அவரை தெய்வங்களிலேயே நீண்டகாலம் வாழ்ந்தவர் என்று கூறுகிறீர்கள் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.

Gallery