ஷூட்டிங் ஆரம்பித்த ஒருசில மாதத்திலே இத்தனை கோடியா? கமல்ஹாசன் படத்தால் புறளும் மாஸ்டர் இயக்குநர்..

vikram kamalhaasan logeshkanagaraj
By Jai Aug 03, 2021 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தினை இயக்குநராக பணியாற்றி பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாநகரம், மாஸ்டர் போன்ற படங்களை இயக்கிய் வெற்றியை கொடுத்திருந்தார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்த லோகேஷ் விக்ரம் படத்தின் டைட்டிலை வெளியிட்டார். தற்போது ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியாக கமல்ஹாசனும், வில்லனாக விஜய் சேதுபதியும், விஞ்ஞானியாக பகத் பாசிலும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தி டப்பிங் உரிமையை கோல்ட்மேன் மைண்ட் நிறுவனம் விக்ரம் படத்தினை வாங்கியுள்ளது. அதுவும் படப்பிடிப்பு ஆரம்பித்து சில காலமே ஆன நிலையில், 31 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.

படத்தின் மொத்த பட்ஜெட்டே 70 கோடி என கூறியதில் அதன் பாதி தொகையை இந்தி டப்பிங் உரிமை கொடுத்துள்ளது.