பெரியார் சிலையை உடைக்கணும்! சர்ச்சையை ஏற்படுத்தி தலைமறைவாகிய கனல் கண்ணன்..

Periyar E. V. Ramasamy
By Edward Aug 04, 2022 10:17 AM GMT
Report

தமிழில் ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி பிரபலமானவர் கனல் கண்ணன். ஸ்டண்ட் மாஸ்டாராகவும் நடிகராக நடித்து வரும் கனல் கண்ணன், சென்னை மதுரவாயலில் கடந்த 30 ஆம் தேதி நடைபெற்ற இந்து முன்னணி நடத்திய கூட்டத்தில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய கனல் கண்ணன், இந்துவாக இருப்பது பெருமை என்றும் ஒருகாலக்கட்டத்தில் வாள் எடுத்து சண்டை போட்டு நாட்டினை பிடித்தார்கள். இப்போது மதமாற்ற என்ற பெயரில் அப்படி நாடுகளை பிடித்து வருகிறார்கள். ஸ்ரீரங்கத்தில் இருக்கும் ரங்கநாதர் கோயிலில் பல லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கிறார்கள்.

அப்படி தரிசனம் முடித்து வெளியே வரும் போது எதிரே கடவுள் இல்லை என்று கூறியவரின் சிலை உள்ளது. அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அப்போது தான் இந்து எழுச்சி நாள் என்று சர்ச்சையாக பேசியுள்ளார்.

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்புறம் பெரியாரின் சிலை இருப்பதால் அதை உடைக்க வேண்டும் என்று கூறிய கனல் கண்ணன் மீது திராவிடர் கழகம் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

சைபர் கிரைம் போலிசார் கனல் கண்ணன் மீது வழக்கு பதிந்தனர். ஆனால் தற்போது கனல் கண்ணன் தலைமறைவு ஆகிவிட்டதாகவும் கூடிய சீக்கிரம் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.