ரூ. 1 லட்சம் மின்கட்டணத்தை கட்டாமல் டிமிக்கி கொடுத்த பிரபல நடிகை.. வெளுத்து வாங்கிய அமைச்சர்..
கங்கனா ரனாவத்
பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கங்கனா ரனாவத் தன் வீட்டின் மின்கட்டணம் ரூ. 90,384-ஐ கட்டவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சுக்வீந்தர் சிங் ராகு இருக்கும் அங்கு நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா இருந்து வருகிறார்.
1 லட்சத்துக்கு மின்கட்டணம்
சமீபத்தில் நடந்த மாண்டி தொகுதியின் பொதுக்கூட்டத்தின் போது மணாலியில் உள்ள வீட்டில் நான் வசிக்கவே இல்லை, ஆனால் எனக்கு ரூ. 1 லட்சத்துக்கு மின்கட்டணம் வந்துள்ளது. இது மாநிலத்தின் பரிதாபமான நிலையை காட்டுகிறது என்று சர்ச்சையாக பேசியிருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இமாச்சல பிரதேச மாநில மின்வாரியம் தரப்பில் அறிக்கை வெளியிட்டனர்.
அதில் கங்கனா ரனாவத் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் மின்கட்டண செலுத்தவில்லை. மேலும் அதற்கு முன் ரூ. 42,287 பாக்கி வைத்திருக்கிறார். இவை அனைத்தும் சேர்த்துதான் கங்கனா ரனாவத் வீட்டின் மின்கட்டணம் ரூ. 90,384 பாக்கி இருக்கிறது.
இதற்கு இமாச்சல பிரதேசத்தின் பொதுப்பணித்துறை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், 2 மாத பாக்கியை கட்டிவிட்டு விமர்சனம் செய்யட்டும் என்று கங்கனா ரனாவத்தை விமர்சித்திருக்கிறார். இதற்கு பலரும் சங்கி எம்பின்னா இப்படித்தான் இருப்பாங்களோ என்று கங்கனாவை கலாய்த்து வருகிறார்கள்.