கங்கனாவிடம் அத்துமீறல்.. அந்த இடத்தில் அடி!! பரபரப்பு வீடியோ காட்சி - இதோ

Actors Indian Actress Kangana Ranaut Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 06, 2024 01:44 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் மிகப்பெரும் உயரத்தை அடைந்தவர் கங்கனா ரனாவத். இவர் பல தேசிய விருதுகளை வாங்கி குவித்துள்ளார்.

கங்கனா தமிழில் கடந்த 2023 -ம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் வெளிவாந்த சந்திரமுகி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கங்கனாவிடம் அத்துமீறல்.. அந்த இடத்தில் அடி!! பரபரப்பு வீடியோ காட்சி - இதோ | Kangana Ranaut Slapped By Cisf

சினிமா மட்டுமின்றி கங்கனா அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கிய கங்கனா 537022 வாக்குகளை பெற்று 74755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது, கங்கனா சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

அப்போது அங்கிருந்த துணை ராணுவமான (CISF) பெண் வீரர் ஒருவருக்கும் கங்கனா இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. வாக்குவாதம் முற்றியதில் கங்கனாவை பெண் பாதுகாப்பாளர் கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது.

தற்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது பற்றி கங்கனா ரனாவத் விளக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.