நடிகை கங்கனாவின் சொத்து மதிப்பு 94 கோடி! வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த முடியவில்லையாம்!
பாலிவுட் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கங்கனா ரணாவத். சமீபகாலமாக சர்ச்சைக்குரிய சம்பவங்களில் பேசி மாட்டிக்கொண்டு பல ரைடுகளை சந்தித்து வருகிறார். சினிமா சம்பந்தப்பட்ட பிரபலங்களை பகைத்தும் வருகிறார்.
தற்போது நடிகை ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான தலைவி படத்தினை நடித்து முடித்து சில படங்களில் நடித்து வருகிறார். சுமார் ஒரு படத்திற்கு 10 அல்லது 12 கோடிகளுக்கு மேல் சம்பளமாக வாங்கி வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டில் இருந்து 2021 ஆம் ஆண்டு வரை சுமார் 100(13 மில்லியன்) கோடி வருமானமாக பெற்று சொத்து மதிப்பாக வைத்திருகிறார்.
நடிகை, தயாரிப்பாளர், மாடல், இயக்குநர் என பன்முகத்திறமைகளை கொண்டு இருப்பவர். மேலும் பிளாட்டினம் அசோசியேஷனிற்கு பிராண்ட் அம்பாஸ்டராக இருந்து வருகிறார் கங்கனா. அதற்காக 3 அல்லது 3.5 கோடி வாங்கி வருகிறார். 33 வயதான கங்கனா வேலை இல்லாததால் வருமான வரி செலுத்த கஷ்டப்படுவதாக கங்கனா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நான் அதிக வருமான வரி செலுத்துகிறேன். என்னுடைய மொத்த வருமானத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்தி வருகிறேன். ஆனால் கடந்த வருடம் எனக்கு வேலை இல்லை.
நான் வரி செலுத்த தாமதம் செய்ததால் வட்டி விதித்துள்ளனர். ஆனாலும் இதனை வரவேற்கிறேன். இந்த காலம் வரி செலுத்தும் தனி நபர்களுக்கு கஷ்டமான காலமாக உள்ளது என்று கூறியுள்ளார்.