அதிகாலை வந்த சோகச்செய்தி!! பிரபல நடிகர் 44 வயதில் மரணம்..

Actors Death Cinema News
By Jai Jul 04, 2026 06:28 AM GMT
Report

படுகெளடா

சினிமா பிரபலங்களின் மரணம் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை 44 வயதான நடிகரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கன்னட சின்னத்திரை நடிகராக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் படுகெளடா என்று அழைக்கப்படும் நடிகர் பத்மநாப கே. எம்.

கன்னட சீரியல் உலகில் பிரபலமான நபராக இருந்து வந்தவர். மாடலாக இருந்து பின் சினிமா மற்றும் சீரியல் பக்கம் வந்தவர், கன்னட ரியாலிட்டி ஷோவான ’பாட்டே மண்டி கடிகே பந்துரு’வின் 2வது சீசனில் பங்கேற்றார்.

அதிகாலை வந்த சோகச்செய்தி!! பிரபல நடிகர் 44 வயதில் மரணம்.. | Kannada Bandru Paddu Gowda Dies Of Brain Tumor

அதன்பின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த படுகெளடா, தன்னுடைய மனைவி, மகளுடன் பெங்களூரு யெலஹங்காவில் வசித்து வந்தார்.

இதனிடையே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்ட போதிலும் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

அவருக்கு குணப்படுத்த முடியாத மூளைக்கட்டி இருந்ததும் அதற்கான சிகிச்சை பெற்று வந்ததும் தெரிகிறது. ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர் மரணமடைந்துள்ளார்.